About Me

3 ஆவது முறையாக பட்டம் வென்றார் மெட்வெடோவ்!

ஆண்களுக்கே உரித்தான டென்னிஸ் தொடரான ஜப்பான் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் வெற்றிபெற்று தொடர்ந்தும் 3 ஆவது முறையாக டேனில் மெட்வெடோவ் பட்டம் வென்றார்.

கடந்த 29 ஆம் திகதி முதல் டோக்கியோவில் நடைபெற்றுவரும் குறித்த தொடரின் இறுதி போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இதில் ஜப்பானிய வீரரான கெய் நிஷிகோரி மற்றும் ரஷ்யாவின் முன்னணி வீரரான டேனில் மெட்வெடோவ் பலப்பரிட்சை நடத்தியிருந்தனர்.

ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய மெட்வெடோவ் சுமார் ஒரு மணி நேரத்தில், 6-2, 6-4 என்ற அடிப்படையில் செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார்.

இந்த வெற்றி மூலம் குறித்த தொடரை தொடர்ந்தும் 3 முறை வென்றவர் என்ற பெருமையை டேனில் மெட்வெடோவ் பெற்றுள்ளார்.

Post a Comment

0 Comments