About Me

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலி திடீர் இராஜினாமா

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

குறித்த இராஜினாமாவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், இன்று காலை 10.30 மணிக்கு ஓவல் அலுவலகத்தில் எமது நண்பர் நிக்கி ஹேலி பெரிய அறிவிப்பை விடுத்துள்ளார் என ட்ரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இவர் இஸ்ரேலின் மீது ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாட்டை அடிக்கடி விமர்சித்து வந்துள்ளார்.

இது குறித்த பிரச்சினைகள் எழுந்த நிலையில், கடந்த வாரம் தனது இராஜினாமா பற்றி ஜனாதிபதியுடன் முதன் முறையாக கலந்தாலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்களின் வரிப்பணத்தை தனியார் ஜெட் சேவைகளுக்கு ஹேலி பயன்படுத்துவதாக சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் அவரது இராஜினாமாவிற்கும் இதுதான் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி தெற்கு கரோலினா மாகாணத்தின் ஆளுநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments