About Me

உலக வங்கியின் வருடாந்த மாநாடு: இந்தோனேசியாவில் பலத்த பாதுகாப்பு

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாட்டை முன்னிட்டு, இந்தோனேசியாவில் அதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்தோனேசியாவின் பாலி தீயில் நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ள குறித்த மாநாட்டிற்கான பாதுகாப்புப் பணிகள் தொடர்பில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

நூற்றுக்கணக்கான ஆயுதப்படையினர் மற்றும் பொலிஸார் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

தீவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த வைஸ் அட்மிரால் டிடிட் ஹெர்தியாவான், தமது படையினர் துரிதமாக செயற்படும் திறன்கொண்டவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாளை ஆரம்பமாகவுள்ள குறித்த மாநாட்டை முன்னிட்டு, வாகனங்கள் அனைத்து சோதனையின் பின்னரே தீவுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. அத்தோடு, பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments