About Me

அமெரிக்க வெளிவிவகார செயலாளர் சீனாவிற்கு விஜயம்!

அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மைக் பொம்பியோ சீனாவிற்கான விஜயமொன்றை இன்று (திங்கட்கிழமை) மேற்கொண்டுள்ளார்.

சீன தலைநகர் பீய்ஜிங் சென்றடைந்த அவர் அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டதுடன், மைக் பொம்பியோ, பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகின்றார்.

அமெரிக்கா சீனாவிற்கு இடையில் வர்த்தகப்போர் உச்சம் பெற்றுள்ள நிலையில், அதனைக் குறைக்கும் வகையில், அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மைக் பொம்பியோ சீனா சென்றுள்ளார்.

சீனா சென்றுள்ள மைக் பொம்பியோ, சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi ஐச் சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், இதன்போது, இருநாட்டு வர்த்த பிரச்சினைகள், அதனைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனாவின் மூத்த இராஜதந்திரியும், அமெரிக்காவிற்கான முன்னாள் சீன தூதுவருமான YANG JIECHI ஐயும், மைப் பொம்பியோ சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, இருநாட்டு பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிவகைகள், மற்றும் பொம்பியோவின் வடகொரிய விஜயம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சீன விஜயத்திற்கு முன்னர் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னைச் சந்தித்த மைக் பொம்பியோ பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்தார்.

சிங்கப்பூர் ஒப்பந்தத்தினை தொடர்ந்தம் நடைமுறைப்படுத்துவது, அணுவாயுத களைவு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments