About Me

யாழ். பருத்தித்துறை பிரதேச செயலக மக்களுக்கோர் அறிவித்தல்!!!

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வழிகாட்டலில் நாளை யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட யா/ ஹாட்லிக் கல்லூரி மற்றும் யா/ மெதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசாலை ஆகிய இரு பாடசாலைகளையும் இணைத்து சுனாமி ஒத்திகை நிகழ்வு ஒன்று நிகழ்த்தப்படவுள்ளது.
இவ்வொத்திகை நிகழ்வுக்குரிய வெளியேற்று நிலையமாக யா/ வட இந்து பெண்கள் கல்லூரியில் முன்னெடுகக்ப்படவுள்ளது.

எனவே இது தொடர்பில் பொது மக்கள் பதற்றமின்றி இருக்குமாறும் இது ஓர் ஒத்திகைச் செயற்பாடு என்பதால் எவரும் குழப்பமடையத் தேவையில்லை எனவும் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments