About Me

யாழில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பு....! மூன்று சந்தேக நபர்கள் கைது

யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் இன்று(செவ்வாயக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 21 பேரின் வீடுகள் இதன்போது சோதனையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இந்த நடவடிக்கையின் போது வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 81 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

வட மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலில் யாழ்ப்பாணப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு பொலிஸ் பிராந்தியங்களை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 150 இற்கும் மேற்பட்ட பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Post a Comment

0 Comments