About Me

இங்கிலாந்தை சமளிக்குமா இலங்கை ; இன்று போட்டிகள் ஆரம்பம்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று பகல் 2.30 மணிக்கு தம்புள்ளை, ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டி, ஒரு இருபதுக்கு 20 போட்டி, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

அதன்படி இப் போட்டித் தொடரானது இன்று ஆரம்பமாகி எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இவ்விரு அணிகளுக்கான முதலாவது ஒருநாள் போட்டி கடந்த 1982 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கொழும்பு, எஸ்.எஸ.சி மைதானத்தில் இடம்பெற்றது. இதில் இங்கிலாந்து அணி ஐந்து ஓட்டங்களினால் வெற்றியீட்டியது. 

இந் நிலையில் இவ் விரு அணிகளும் எதிர்கொண்ட இறுதி ஒருநாள் போட்டி இங்கிலாந்தின், சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இதிலும் இங்கிலாந்து அணி 122 ஓட்டத்தினால் வெற்றி பெற்றது.

இதேவேளை இவ்விரு அணிகளும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் மொத்தம் 69 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இலங்கை அணி 34 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி 33 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதுடன், ஒரு போட்டி சமநிலையிலும், ஒரு போட்டி கைவிடப்பட்ட நிலையிலும் உள்ளது. 

இந் நிலையில் ஐ.சி.சி.யின் ஒரு நாள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியை இலங்கை அணி எதிர்கொள்வது என்பது மிகவும் சவாலன விடயமாக உள்ளது. எனினும் இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமல் இங்கிலாந்து அணிக்கு இத் தொடரில் சவால் விடுவம் வகையில் இலங்கை அணி அமையும் எனத் தெரிவித்துள்ளார். 

அந்த வகையில் தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை அணியின் குழாமில் நிரோஷன் திக்வெல்ல, குசல் பெரேரா, உபுல் தரங்க, தனஞ்சய டிசில்வா, தசூன் சானக்க, திஸர பெரோ, அகில தனஞ்சய, லக்ஷன் சந்தகன், லசித் மலிங்க, நுவன் பிரதீப், கசூன் ராஜித, அமில அபன்ஷோ, துஷ்மந்த சமீர மற்றம் சண்டீர சமர விக்ரம ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

ஈயோன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிக் குழாமில் ஜோஸ் பட்லர், ஜொசன் ரோய், ஜோனி பிரிஸ்டா, ஜோ ரூட், பென்ஸ்டோக்ஸ், மொய்ன் அலி, லியாம் டாவ்சன், சாம் குரான், கிரிஸ் வோக்ஸ், மார்க் வூட், டோம் குரான், அடில் ரஷீத், அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஒலிஸ்டோன் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments