‘புதுப்பேட்டை’ இரண்டாம் பாகம் விரைவில் – செல்வராகவன்

‘புதுப்பேட்டை’ இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

‘பல ஆண்டுகளுக்குப் பின்னர் மறுபடியும் ‘புதுப்பேட்டை’ படம் பார்த்தேன். ஒவ்வொரு முறையும் ஆச்சரியமாக இருக்கிறது’ என ‘மாநகரம’; உட்பட பல படங்களில் நடித்த நடிகர் சந்தீப் கிஷண் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

அந்த டுவீட்டை ஷேர் செய்த செல்வராகவன் அவருக்கு நன்றியும் தெரிவித்தார். அந்த டுவீட்டுக்குக் கீழே, ‘புதுப்பேட்டை’ இரண்டாம் பாகத்துக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்’ என ஒரு இரசிகர்கள் டுவீட் செய்திருந்தார்.

அதற்கு, ‘நிச்சயம் நேரம் வரும் ப்ரோ. இது கண்டிப்பாக நடக்கும்’ என செல்வராகவன் பதிலளித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு வெளியான ‘புதுப்பேட்டை’ படத்தில், தனுஷ் ஹீரோவாக நடிக்க, சினேகா, சோனியா அகர்வால் கதாநாயகிகளாக நடித்தனர்.

இந்தப்படம், வெளியாகி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் அதன் இரண்டாம் பாகம் குறித்து செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments