About Me

வடக்கு மாகாண முதலமைச்சரின் பதவிக்கு அடுத்தது யார்? – சம்பந்தன்!

வடக்கு மாகாண முதலமைச்சரின் பதவிக்கு போட்டியிடும் கட்சியின் வேட்பாளர் குறித்த அதன் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் இன்று (திங்கட்கிழமை) கொழும்பிலுள்ள பத்திரிகையாளர் குழுவை சந்தித்து கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இதன் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் வடக்கு முதலமைச்சர் விமர்சனம் செய்ததாக ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தனர்.

இதற்க்கு பதிலளித்த சம்பந்தன், அவர் கூறிய விடயத்திற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என கூறினார்.

அத்துடன் விக்னேஸ்வரனின் கருத்துக்களை பொருட்படுத்தாமல், அரசாங்கமும் சர்வதேச சமூகமும் நாட்டின் அரசியல் மற்றும் சமூக விடயங்கள் உட்பட பல பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், ஜனாதிபதி வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து நிலங்களையும் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு ஒப்படைக்குமாறு உத்தரவிட்டமையை சுட்டிக்காட்டிய சம்பந்தன், வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் சரியான நேரத்தில் முடிவை எடுத்துள்ளதாகவும் கூறினார்.

வடக்கு மாகாண சபை தேர்தல் கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்றது. இந்நிலையில் வடக்கு மாகாணசபையின் 5 வருடங்கள் எதிர்வரும் 25 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments