மத்திய அல்பர்ட்டா பகுதியில் துப்பாக்கிச் சூடு: சந்தேகநபரை தேடி விசாரணைகள் ஆரம்பம்!

வாகனத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபரை தேடி, றோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அல்பர்ட்டா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை, 60 அவென்யூ மற்றும் 58 தெரு பகுதியில் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றது.

இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் ஆண் என்றும், அவர் துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டு அங்கிருந்து கருப்பு காரில் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு பெரும் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், “இது ஒரு தனிப்பட்ட சம்பவமே என்றும் இதனால் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எந்தவித ஆபத்து இல்லை” என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் குறித்த விடயம் தொடர்பில் தகவல் தெரிந்தால் அவசர பிரிவுக்கு அழைப்பினை ஏற்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments