நாடாளுமன்ற அமர்வுக்கு தலைக்கவசம் இன்றி பயணித்த அமைச்சர்...! சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்!

நாடாளுமன்றுக்கு செல்லும் வீதியில் ஏற்பட்ட கடும் வாகன நெரிசல் காரணமாக கல்வி அமைச்சர் அகிலாவிராஜ் காரியவசம் வீதியால் சென்ற மோட்டார் சைக்கிளை மறித்து ஏறிச்சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அரசாங்க ஓய்வுதியம் பெறும் நபர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பத்தரமுல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

பின்னர் குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்றுக்கு செல்லும் பிரதான வீதியும் தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுக்கு சென்ற அமைச்சர் அகிலாவிராஜ் காரியவசமும் வீதியில் நீண்ட நேரம் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

இருப்பினும் அங்கு வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அவர் நாடாளுமன்றுக்கு சென்றிருந்தார்.

மேலும் அமைச்சராக இருந்தும் அவர் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் இன்றி பயணம் செய்தமையானது சமூக ஊடகங்களில் விமர்சனம் எழக் காரணமாக அமைந்துள்ளது.

Post a Comment

0 Comments