About Me

விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு!

விடுதலை புலிகள் தொடர்பில் சர்ச்சை கருத்தை வெளியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடந்த ஜுலை மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் “விடுதலைப் புலிகளின் கை ஓங்க வேண்டும்” எனப் பேசிய உரை குறித்து பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், இன்று (திங்கட்கிழமை) காலை, திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவிற்கு சென்றிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டபின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் தற்போது அரசியலைமைப்பை மீறியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments