தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கம்!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், ரிஷப் பந்த், டோனி, அம்பத்தி ராயுடு, மணிஷ் பாண்டே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஷமி, கலீல் அஹமட், சர்துல் தாக்கூர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments