About Me

கால்பந்து போட்டியின் போது உருண்டு, புரண்டு செல்லமாக விளையாடிய நாய்

ஜார்ஜியா நாட்டில் கால்பந்து போட்டியின் போது நாய் ஒன்று விளையாட்டுத்தனமாக விளையாடிய காட்சிகள் பார்வையாளர்களை சிரிப்பில் ஆழ்த்தியது.

ஜார்ஜியாவில் தேசிய அளவில் புகழ் பெற்ற டில்லா மற்றும் டர்பிடோ குடாஸி (Dila and Torpedo Kutasi) ஆகிய அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. 

அப்போது மைதானத்திற்குள் புகுந்த நாய் ஒன்று திடீரென துள்ளிக் குதித்து விளையாடத் தொடங்கியது. இதனைக் கண்ட வீரர்கள் அதனை விரட்ட மேற்கொண்ட முயற்சிகளை ஜாலியாக எடுத்துக் கொண்ட அந்த நாய் உருண்டு புரண்டு விளையாடத் தொடங்கியது.

நாயின் சேட்டையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆனாலும் தனது விளையாட்டுத்தனத்தை நிறுத்தாத அந்த நாய் இறுதியில் ஒருவழியாக வெளியேறியது.

Post a Comment

0 Comments