About Me

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டி: நாணய சுழற்சியில் வென்றது பாகிஸ்தான்!

பாகிஸ்தான் – அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டுபாயில் நடைபெறவுள்ளது.

குறித்த தொடரின் முதலாவது போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) டுபாயில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் டிம் பெயினி தலைமையில் அவுஸ்திரேலியா அணியும், சர்ஃப்ராஸ் அகமட் தலைமையில் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தளுவர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியில், மொகமட் ஹபீஸ், இமாம்-உல்-ஹக், அஸ்ஹர் அலி, ஆசாத் ஷபிக், ஹரிஸ் சோஹைல், பாபர் ஆசாம், சர்ஃப்ராஸ் அகமட், யாசீர் ஷா, பிலால் ஆசிஃப், வஹாப் ரியாஸ், மொகமட் அப்பாஸ் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலிய அணியில், அரோன் பிஞ்ச், உஸ்மன் கவாஜா, ஷோன் மார்ஷ், மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசாக்னே, டிம் பெயின், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், பீட்டர் சிடில், ஜான் ஹாலந்த் ஆகியோர் விளையாடுகின்றனர்.

Post a Comment

0 Comments