கொழும்பில் உள்ள டயர் விற்பனை நிலையம் ஒன்றில் பாரிய தீ விபத்து!

கொழும்பு, பத்தரமுல்லை – பெலவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் டயர் விற்பனை நிலையம் ஒன்றில் சற்று முன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தால் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தற்போது அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த விபத்து காரணமாக பத்தரமுல்லை – பெலவத்தை பிரதேசத்தின் வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே சாரதிகளை மாற்று வழியை பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments