About Me

நயன்தாரா நடிப்பில் உருவாகும் 'ஐரா' திரைப்படத்தின் FirstLook!

சர்ஜூன் - நயன்தாரா கூட்டணியில் உருவாகும் 'ஐரா' திரைப்படத்தின் FirstLook போஸ்டர் வெளியானது!

லக்‌ஷ்மி, மா ஆகிய குறும்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சர்ஜூன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் திரைப்படம் 'ஐரா'. அறம் திரைப்படத்தை தயாரித்த KJR ஸ்டுடியோஸ் இத்திரைப்படத்தினை தயாரிக்கின்றனர். 

தற்போது அஜித்தின் விஸ்வாசம், கொலையுதிர் காலம், சைரா நரசிம்ம ரெட்டி, எம்.ராஜேஷின் பெயரிடப்படாத திரைப்படம் என நயன்தாரா பிஸியாக நடித்து வருகின்றார். இதற்கிடையில் தற்போது இயக்குநர் சர்ஜூன் இயக்கத்தில் ஐரா திரைப்படத்தில் இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உறுவாகும் இத்திரைப்படத்தில் இவர் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கின்றார் என்னும் தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் FirstLook போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Post a Comment

0 Comments