About Me

ஜமால் கஷோக்கி கொலை:அரச குடும்ப கட்டளைக்கு இணங்கவே இடம்பெற்றுள்ளது- உளவுத்துறை

சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலையானது, சவுதி அரச குடும்ப உறுப்பினர் ஒருவருடைய கட்டளையின் பிரகாரமே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சவுதி அரச குடும்பத்தின் உறுப்பினர் ஒருவரின் கட்டளைக்கு இணங்கவே, ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டதாக பிரித்தானிய உளவுத்துறை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது.

கொலைக்கான கட்டளையை சவுதி முடிக்குரிய இளவரசர் நேரடியாக தொடர்புபட்டதாக தெரிவிக்க முடியாத போதிலும் அரச குடும் உறுப்பினர் ஒருவர் கொடுத்த கட்டளையே கொலைக்கு வழிவகுத்ததென உளவுத்துறை உறுதியாக தெரிவித்துள்ளது.

இம்மாதம் இரண்டாம் திகதி ஜமால் கஷோக்கி துருக்கியிலுள்ள இஸ்தான்புலின் சவுதி தூதரகத்தில் வைத்து கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments