About Me

West bank பகுதியில் துப்பாக்கிச்சூடு: மூவர் படுகாயம்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களின் கட்டுப்பாட்டில் காணப்படும் west bank பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று இஸ்ரேலியர்கள் படுகாயமடைந்துள்ளனர். இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென தெரிவிக்கப்படுகிறது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட குறித்த தாக்குதலை, பலஸ்தீனியர்களே நடத்தியுள்ளனரென இஸ்ரேல் இராணுவம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

யூத மக்கள் அதிகமாக வசிக்கும் குறித்த பகுதியை நோக்கி இன்று காலை சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதல்தாரிகள் தப்பிச்சென்றுள்ள நிலையில், பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பகுதியை இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தற்காலிகமாக மூடியுள்ளனர். தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.

கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து பலஸ்தீனத்தின் தாக்குதலில் ஒரு அமெரிக்க பிரஜை மற்றும் பிரித்தானிய சுற்றுலாப்பயணி உள்ளிட்ட 50இற்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

இதே காலப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 260இற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் அதிகமானோர் தாக்குதல்தாரிகள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments