About Me

இராஜினாமாவை அறிவித்தார் இந்திரஜித் குமாரசுவாமி

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி டிசம்பர் 20 ஆம் திகதி முதல் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மோசடி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட அர்ஜுன் மகேந்திரனுக்கு பதிலாக கடந்த 2016 ஜூலை நியமிக்கப்பட்டார்.

இவர் நியமிக்கப்பட்டு ஒரு ஆண்டுகளிலேயே அதாவது 2017 ஒக்டோபர் மாதமே குளோபல் கேபிடல் மார்க்கெட்ஸ் வெளியீடு, குமாரசாமியை தெற்காசியாவில் இந்த ஆண்டின் மத்திய வங்கி ஆளுநராக அறிவித்தது.

இதேவேளை இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாய்நாட்டிற்கு வழங்கிய மிகச்சிறந்த மற்றும் விலைமதிப்பற்ற சேவைக்காக புகழ்பெற்ற ஆளுமைகளை பாராட்டு அவருக்கு ‘தேசிய மரியாதை’ வழங்கினார்.

Post a Comment

0 Comments