About Me

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்ட விவகாரம் – விசாரணைகள் ஆரம்பம்!

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் இலங்கை அதிகாரி ஒருவர் வானில் கடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு கடத்தப்பட்ட அவரிடம் பல்வேறு விடயங்கள் குறித்து கடத்தல்காரர்கள் விசாரணை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில தினங்களுக்கு முன்னர் சுவிஸில் தஞ்சம் கோரிய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி ஒருவர் குறித்தே தூதரக அதிகாரியிடம் இவ்வாறு விசாரணை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இறுதியில் இதனை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகின்றது.

Post a Comment

0 Comments