About Me

கிளிநொச்சியில் நடந்த சம்பவம்: 11 வயது சிறுமி துஷ்பிரயோகம் – கடைக்குத் தீ வைத்த பொதுமக்கள்

கிளிநொச்சி, பரந்தன்-முல்லைத்தீவு வீதியில் சிறு புடவைக் கடை ஒன்றை நடத்தி வரும் ஒருவர் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இதனை அவதானித்த பொதுமக்கள் குறித்த சந்தேகநபரை பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்ததோடு அவரது புடவைக் கடையினையும் தீயிட்டுக் எரித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் தற்போது நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருதாவது, குறித்த பகுதியில் சிறு புடவைக் கடை நடத்திவரும் ஒருவர் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அத்துமீறி தனிநபர் ஒருவரின் காணியைப் பிடித்து வியாபார நிலையம் அமைத்து நடத்தி வருகின்றார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே இது தொடர்பாக கண்டாவளைப் பிரதேச செயலாளரினால் கடந்த 2017 ஆம் ஆண்டு கரைச்சி பிரதேச சபையின் செயலாளருக்கும் 2019 ஆம் ஆண்டு பிரதேச சபையின் தவிசாளருக்கும் குறித்த நபர் சட்டவிரோதமாக கடை நடத்தி வருவதாக முறைப்பாடு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரின் வியாபார அனுமதிப் பத்திரத்தை நிறுத்துமாறு கோரி கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால் அக்கடிதத்திற்கு பிரதேச சபையினால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் குறித்த நபர் 11 வயதுச் சிறுமியை அச்சுறுத்தி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இதனை பலரிடம் கூறிய போது எவரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இவரது நடவடிக்கையினை இரகசியமாக காணொளி எடுத்த பிறிதொருவர் அதனை ஆதாரமாக பொலிஸாரிடம் கொடுத்து நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். 

ஆத்திரமடைந்த பொது மக்கள் அவரது கடையினையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

Post a Comment

0 Comments