About Me

பதவி விலகுவது குறித்து சுமந்திரன் அதிரடி அறிவிப்பு

தான் பதவி விலகுவதா இல்லையா என்பதை தானே தீர்மானிப்பேன் என்றும் அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால் பதவி விலகுவேன் என்ற நிலைப்பாட்டிலேயே தற்போது இருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் மீது கூட்டமைப்பு சார்ந்தவர்களும் ஏனையவர்களும் முன்வைத்து வருகின்ற விமர்சனங்கள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்வாறான கருத்துக்களை எங்கள் மீது முன்வைப்பது என்பது தவிர்க்க முடியாத ஒரு விடயம் என்றும் வெளியிலே இருக்கிறவர்கள் விமர்சிப்பதும் கூட்டமைப்பிற்குள்ளே ஒவ்வொரு கட்சிகளிலேயும் இருப்பவர்கள் விமர்சிப்பதும் சாதாரண ஐனநாயக சூழலில் ஏற்படுகிற ஒரு நிலைமை என்றும் அவர் கூறினார்.

அத்தோடு அரசியலமைப்பு உருவாக்க முடியாமல் போனால் பதவி விலகுவேன் என்று தான் கூறியதாகவும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முற்றாக கைவிடப்பட்டது என்று இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

சிறிலங்கா பொதுஐன பெரமுன கூட புதிய அரசியலமைப்பு உருவாக்குவோம் என்று கூறியுள்ளார்கள், எனவே பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அதனைச் செய்வோம் என்று மஹிந்த ராஜபக்ஷவும் கூறியுள்ளதாக சுமந்திரன் தெரிவித்தார்.

ஆனால் புதிய அரசமைப்பு உருவாக்கம் முற்றாக கைவிடப்பட்டு விட்டது என்ற தீர்மானத்திற்கு இன்னமும் வரவில்லை. அப்படியான ஒரு தீர்மானம் எடுக்கப்படுகின்ற நேரத்தில் தான் பதவி விலகுவதாகவும் கூறினார்.

Post a Comment

0 Comments