About Me

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அடுத்த தேர்தலில் போட்டியிடுவது உறுதி

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என அக்கட்சியின் முன்னாள் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக நேற்று கருத்து தெரிவித்த அவர், தேர்தலின்போது கட்சியை மைத்திரிபால சிறிசேனவே வழிநடத்துவார் என்றும் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் பொதுக் கூட்டணியாக களமிறங்கும் என அவர் தெரிவித்தார்.

அந்தவகையில் போட்டியிடும் கூட்டணியின் சின்னமும் பொதுவான ஒன்றாக இருக்கும் என கூறிய அவர், நாற்காலி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றே கட்சி விரும்புவதாக கூறினார்.

அத்தோடு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீட்டெடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொலநறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சுதந்திர கட்சியின் உறுப்பினர் ஒருவர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments