About Me

வெள்ளைவான் கடத்தல் நாடகத்திற்கு 3 மில்லியன் பணப்பரிவர்த்தனை - வெளியான முக்கிய தகவல்


ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின் போது "வெள்ளை வேன்" சம்பவங்கள் குறித்து சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்ட இருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் சி..ஐ.டி.யினர் மேற்கொண்ட விசாரணைகளின்போது, 3 மில்லியன் வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட பின்னர் அவர்கள் அவ்வாறு செய்ததாக கூறியதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்குறுதியளிக்கப்பட்ட தொகையான ரூ .3 மில்லியனில் இருந்து தங்களுக்கு ரூ .2 மில்லியன் ரொக்கம் கிடைத்ததாக இருவரும் சிஐடியிடம் கூறியுள்ளனர்

மேலும் கடந்த சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Post a Comment

0 Comments