About Me

கட்சித் தலைவரின் அதிகாரங்கள் குறித்து ஆராயுமாறு ரணில் கோரிக்கை

UNP leader Ranil Wickremesinghe has requested party lawyers to look into the powers and functions of the party leader under the present party constitution
கட்சி அரசியலமைப்பின் கீழ் கட்சித் தலைவரின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கும் தேவையான மாற்றங்களைச் செய்யுமாறும் சட்டத்தரணிகளை ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய கட்சி அரசியலமைப்பின் கீழ் கட்சித் தலைவரின் அதிகாரங்கள் அதிகப்படியானவை, எனவே அவை திருத்தப்பட வேண்டும் என்ற கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

கட்சி அரசியலமைப்பின் தற்போதைய விதிகளின் கீழ், கட்சித் தலைவர் ஆறு வருட காலத்திற்கு நியமிக்கப்படுகிறார், மேலும் அவரது பதவிக் காலத்தில் இருக்கும்போது அவரை பதவியில் இருந்து நீக்க முடியாது. எனவே இவற்றை மாற்றுமாறு ரணிலிடம் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையிலேயே கட்சித் தலைவரின் அதிகாரங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கையளிக்க ரணில் விக்ரமசிங்க வழக்கறிஞ்ர்களை கோரியுள்ளார்.

குறித்த அறிக்கை கட்சியின் உறுப்பினர்களிடையே வழங்கப்பட்டு அந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் கட்சியின் செயற்குழுவினால் இறுதி செய்யப்படும்.

Post a Comment

0 Comments